கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, June 30, 2017

பொறியியல் படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்வு

"பொறியியல் படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்வு

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கட்டணம் கடந்த 2012-2013-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.

அதன் பின்னர் தற்போது (2017-2018-ஆம் கல்வியாண்டு) உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, என்பிஏ அங்கீகாரம் கொண்ட படிப்புகளுக்கான கட்டணம் ரூ.45,000-ல் இருந்து ரூ.55,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கான கட்டணம் ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் என்பிஏ அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு கட்டணம் ரூ.75000-ல் இருந்து ரூ.85000-ஆகவும், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் என்பிஏ தரச்சான்று பெற்ற படிப்புளுகளுக்கு கட்டணம் ரூ.70,000ல் இருந்து ரூ.87,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது"

No comments:

Post a Comment