1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து:
மத்திய அரசு 1-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து:
மத்திய அரசு பள்ளிகளில் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், கடந்த 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி ஆக்கக்கூடாது என்றும், அவர்களை கட்டாய தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.இதற்கிடையே, இந்த கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக மாநிலங்களும், கல்வியாளர்களும் முறையிட்டனர்.
இதனால் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் நாடு முழுவதும் சர்வதேச தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1ஆம் வகுப்பிலிருந்து, 8ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்யும் திட்டம், தற்போது நடைமுறையில் உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த மாற்றங்கள், இலவச கல்வி உரிமை மசோதாவில் சேர்க்கப்பட்டு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment