கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, August 26, 2017

சிறப்பாசிரியர் தேர்வை கவனமுடன் எழுதுங்கள்

சிறப்பாசிரியர் தேர்வில் பணியில் உள்ளவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பு : டிஆர்பி அறிவிப்பு

சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். வெற்றி பெற்றாவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 2014ல் அனைத்து மாநிலங்களிலும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன் மூலம் ஓவியம், தையல், உடற்கல்வி, இசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் பணிநியமனம் பெற்றனர். வாரம் 3 நாள் குறிப்பிட்டநேரப் பணி என்ற விதிமுறைகளின் கீழ் இவர்கள் பணிபுரிந்தனர்.

ஆரம்பத்தில் ரூ. 5 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு தற்போது ரூ.7 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்யவும், வேலையில்லாத சிறப்பாசிரியர்களுக்கு அரசு வேலை வழங்கும் வகையில் கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வை அறிவித்தது.

இதற்கான தேர்வு வரும் செப். 23ல் நடைபெற உள்ளது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தளவில் 3 முறைக்கு மேல் இத்தேர்வு நடைபெற்று விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் முதல்முறையாக தேர்வு நடைபெற உள்ளது.சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என அனைவருக்கும் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் மன்ற ஓவிய ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் நல்லகாசிராஜன் கூறுகையில், சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வு மற்ற மாநிலங்களில் பலமுறை நடந்துவிட்டது.

ஆனால் இங்கு தற்போதுதான் நடக்க உள்ளது. பகுதிநேரப் பணியில் இருப்பவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். விண்ணப்பிக்காதவர்கள், தேர்விற்கு வராதவர்களுக்கும் இது முதல்வாய்ப்பாகவே கருதப்படும். தேர்ச்சி பெறாதவர்களால் தொடர்ந்து பணிபுரிய முடியாது.

வெற்றி பெற்றால் பணி நிரந்தரம் செய்யப்படுவர். பணியில் இல்லாதவர்களைப் பொறுத்தளவில் எத்தனை முறைவேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எனவே தேர்வர்கள் கூடுதல் கவனத்துடன் இத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment