கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, August 1, 2017

நெட் (NET EXAM) தேர்வுக்கு விண்ணபிக்க

"நெட் தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: ஆதார் கட்டாயம்

கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட் தகுதித் தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.1) முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பைப் பெறுவதற்கும், ஆராய்ச்சி மாணவர்கள் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கும் தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது அவசியம்.
இந்தத் தேர்வானது வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு சி.பி.எஸ்.இ. இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் வைத்திருப்பவர்கள் ஆன்-லைன் விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.
இதுவரை ஆதார் எடுக்காத விண்ணப்பதாரர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்."

No comments:

Post a Comment