கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, October 18, 2017

வினோதமான கனவு - நகைச்சுவைகள்

நகைச்சுவைகள்

யார் பல் ?
கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள்.

"டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால், மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லைப் பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு சீக்கிரம் பிடுங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு நல்லது," என்றாள் அந்தப் பெண்.

அவள் சொன்னதைக் கேட்டு மிகவும் வியந்த டாக்டர், "நீங்க உண்மையிலேயே மிகவும் தைரியசாலி தான். எந்தப் பல்?" என்றார்.

"அன்பே, உங்கப் பல்லைக் காட்டுங்க," என்றாள் அவள், தன் கணவர் பக்கம் திரும்பி.

குடிப்பழக்கம் நிறுத்த

தன் கணவனின் குடிப்பழக்கத்தால் வெறுப்புற்றிருந்த பெண்ணொருத்தி, அவனுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தாள். பேய் போல வேடம் பூண்டு, சோபாவின் பின்புறம் காத்திருந்தவள், கணவன் வீட்டுக்குள் நுழைந்த போது திடீரென்று அவன் முன்னால் வந்து குதித்துப் பயமுறுத்தினாள்.

"நீ என்னைப் பயமுறுத்த முடியாது. நான் உன் அக்காவைத் திருமணம் செய்துள்ளேன்," என்றான் அவன் மிகவும் அமைதியாக.

வினோதமான கனவு

  டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து, "நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?" "

அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"

???

No comments:

Post a Comment