257 தேர்வு மையங்களில் இன்று செய்முறை தேர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 257 தேர்வு மையங்களில், மாணவர்களின் செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களில், 407 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில், 257 பள்ளிகளை, செய்முறை தேர்வு மையங்களாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில், 77 மையங்கள்; செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 180 மையங்கள் என, 257 இடங்களில், இன்று செய்முறை தேர்வு துவங்குகிறது.
இன்று முதல், 14ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவ-- -மாணவியருக்கும், பிப்., 15ம் தேதி முதல், 28ம் தேதி வரை பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கும் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment