கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, February 3, 2018

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்றுமுதல் ஹால்டிக்கெட்

பிளஸ் 2 தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்றுமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் கூறியுள்ளதாவது:

2018 மார்ச் / ஏப்ரலில் நடக்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) இன்றுமுதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை கண்டிப்பாகச் செய்ய வேண்டும். மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment