தேர்வில் அதிக மார்க் அள்ள ''டிப்ஸ்!''
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்
பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள் நடக்க, இன்னும் ஒரே மாதம்தான் பாக்கி. படி...படி... என்கின்றனர் பெற்றோர்.
தாங்க முடியலையே இந்த கடி என பல்லைக் கடிக்கின்றனர் மாணவர்கள். அப்படியானால், எப்படித்தான் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளுவது? இதோ... இந்த பயனுள்ள ஆலோசனைகளை படிங்க மாணவர்களே
!அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது குறித்து, பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாடசாமி கூறியதாவது:
* அறிவியலில், 17 பாடங்கள் உள்ளன. இதில், எட்டு பாடங்களில் இருந்துதான், ஐந்து மதிப்பெண்கள் கொண்ட, நான்கு பெரிய வினாக்கள் வரும்.
அந்த எட்டு பாடங்களில் உள்ள சுமார், 30 வினாக்களுக்கான விடைகளை, சரியாக தெரிந்திருந்தால், உறுதியாக, 20 மதிப்பெண் அள்ளலாம். பெரிய வினா எழுதும் போது, வரையறை குறித்து கண்டிப்பாக எழுத வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து பாயின்ட் குறிப்பிடுவது அவசியம்.
* இரண்டு மதிப்பெண்கள் கொண்ட வினாவுக்கு, வெறும் விடைகளை மட்டுமே எழுதினால் போதும். குறிப்பாக, அ வினா என்றால் அ எனக்குறிப்பிட்டு, அதற்கு விடை எழுதினால் போதும். பொருத்துக என்ற வினாவுக்கு, இரண்டு பக்கமும் எழுதி, விடையை நிறைவு செய்ய வேண்டும்.
சில மாணவர்கள், பொருத்துக என்ற வினாவுக்கு வலது பக்கம் மட்டும் உள்ள விடையை எழுதுகிறார்கள். இது தவறு.
* இரண்டு மதிப்பெண் வினாவில், கணக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில், யூனிட் என்ற அலகு குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த விடை அர்த்தமில்லாமல் போய்விடும். ஒரு பதிலை, இன்னொரு பதிலுடன் தொடர்புபடுத்தி படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் எதையும் சுலபமாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, புலத்திசை, மின்னோட்டம், காந்தபுலம் என்பதை, பூமிகா என ஞாபகம் வைத்துக் கொண்டால், மறக்காதது.
* ஒரு மார்க் வினாவுக்கு படிக்கும்போது, குரூப் டிஸ்கஷன் செய்வது முக்கியம். படத்துக்கு பென்சிலால்தான், பாகங்களை குறிக்க வேண்டும். படத்துக்கு தலைப்பு போட வேண்டியது அவசியம். பாடத்தின் தலைப்பு, தொடர்பாக அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாடத்தின் தலைப்புக்கு கீழ் உள்ள முதல் பாராவையும், கவனமாக படித்தல் அவசியம். விடைத்தாளில் மார்ஜினுக்கு இடதுபுறம், கண்டிப்பாக கேள்வி எண்ணை குறிப்பிட வேண்டும். ரோமன் எண் அல்லது சப் டிவிஷன் எண்ணை குறிப்பிடக் கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.
பர்ஸ்ட் மார்க் வாங்குவேன் நம்புங்கள் மாணவர்களே!வினாத்தாள் பெற்றவுடன் முதல், 10 நிமிடங்கள் நம்மால் எந்தெந்த கேள்விகளுக்கு சரியாக விடையளிக்க முடியும் என, நிச்சயப்படுத்திக் கொண்டு, பின் எழுத தொடங்க வேண்டும். பெரும்பாலான மாணவர்கள், 90 மதிப்பெண் எடுத்து விடுவார்கள்.
ஆனால், எந்த சிறு தவறும் இல்லாமல் எழுதும் மாணவர்களால் மட்டுமே, 100 மதிப்பெண் பெற்று, வெற்றி பெற முடியும். ஒவ்வொரு மாணவரும், அனைத்து பாடங்களிலும், நான்தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தால்தான் சிறந்த மதிப்பெண் பெற முடியும்.
source :
http://www.dinamalar.com
No comments:
Post a Comment