சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சீரக நீரின் சில நன்மைகள் : செரிமானத்தை மேம்படுத்துகிறது இரத்த சோகை வராமல் தடுக்கிறது தூக்கமின்மையை குறைக்கிறது. ஆஸ்துமா வராமல் தடுக்கிறது தோல் நோய்கள் குணமாகும்
1. தோல் சுத்தமாகும்
சீரக நீர் இரத்ததில் உள்ள அசுத்தங்களை நீக்கி உடல் தோல்களை சுத்தமாக்க உதவுகிறது. முகப்பருக்கள் நீக்கவும் சீரக நீர் பயன்படுகிறது. சீரக நீரில் வைட்டமின் ஏ மற்றும் ஈ இருப்பதால் இளமையான தோற்றத்தை பெற முடியும்.
2. உடல் எடை குறையும்
சீரக நீர் உடல் கட்டமைப்பை மேம்படுத்தி எடையை குறைக்கிறது. சீரக நீர் பசி எடுப்பதை குறைத்து உடல் எடையை குறைக்கிறது.
3. நோயெதிர்ப்பு சக்தி கூடும்
இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யும் இரும்பு சத்துக்கள் சீரக நீரில் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. சீரக நீரில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் நோய்கள் தாக்காமல் தடுக்கிறது.
4. இரத்த சோகையை தடுக்கும்
இரும்பு சத்துக்கள் சீரகத்தில் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சீரகம் பயன்படுகிறது.
5. செரிமானம் அதிகரிக்கும்
சீரக நீர் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாக உள்ளது மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. அசிடிட்டி ஏற்படுவதையும் குறைக்கிறது.
6. இரத்த அழுத்தம் குறையும்
சீரக நீரில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய துடிப்பை சமன் செய்கிறது. வெறும் வயிற்றில் சீரக நீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
7. நீரிழிவு நோய் குறையும்
சீரக நீர் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க மிகவும் உதவியாக இருக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி சர்க்கரை அளவை குறைக்கலாம்.
மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் சீரக நீர் அருந்துமாறு அறிவுறுத்துகின்றனர்

No comments:
Post a Comment