கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, March 24, 2018

உலக காசநோய் தினம் மார்ச் 24

​மார்ச் 24 - உலக காசநோய் தினம் கடைபிடிப்பு

மார்ச் 24ம் தேதி உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் “உலக காசநோய் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினத்தில் காச நோய் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
உலகளவில் காசநோய் பாதிப்புக்குள்ளானோரில் 24 % இந்தியர்கள்.
உலகளவில் எச்.ஐ.வி, மலேரியாவைக் காட்டிலும் காச நோயால் உயிரிழப்பவர்கள் அதிகம். 


2015ல் காச நோயால் பாதிக்கப்பட்டோர் 28 லட்சம்; உயிரிழந்தோர் 4.83 லட்சம்
இந்தியாவில் 10 லட்சம் பேர் காசநோய் பரிசோதனைக்கு வராமலேயே இருக்கின்றனர். 
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் காசநோய் சிகிச்சைக்கு வராமலேயே இருக்கிறார்கள்.
சிகிச்சை மேற்கொள்ளாத நோயாளிகள் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்குக் காசநோயை பரப்புகின்றனர்.
காசநோய் அறிகுறிகள்:
தொடர்ந்து இருமல், உடல் எடை குறைதல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் போன்றவை காசநோய்க்கான அறிகுறிகள். 
நோயாளிகள் 6 மாதங்கள் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே குணப்படுத்த முடியும்.
காசநோய் வராமல் தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் இல்லை. 
மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு காசநோய் கிருமிகள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும். 
ஆனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் நபர்களைத்தான் காசநோயாளியாக மாற்றும். 
சர்க்கரை நோய், புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு காசநோய்த் தொற்று மிக எளிதாக உண்டாகும்.

No comments:

Post a Comment