கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, March 19, 2018

விநாயகர் பெயர்க்காரணம் வரலாறு

விநாயகர்

விநாயகர் பெயர்க்காரணம்
முழுமுதற் கடவுளான விநாயகர் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து, அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கின்றார்.
சிறப்பு பெயர்கள்
இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார். இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
வரலாறு
கைலாயத்தில் பார்வதி தேவி குளிக்கச் செல்லும் போது, தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அதன் பின்னர் தாம் காவல் காக்கும்போது உள்ளே நுழைய அங்கே வந்த சிவபெருமானைத் தடுத்தான் அந்தச் சிறுவன்.
கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான், தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை.
சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்ட வைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி விநாயகரை பார்த்து இந்த பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே இவருக்கு பெயராகி பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment