கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 20, 2018

நாளை முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை

பள்ளிகளுக்கு நாளை முதல் மே 31 வரை கோடை விடுமுறை

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (ஏப்.21) முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒரு வாரத்திற்கு முன் நிறைவுபெற்றன. 10-ஆம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு வெள்ளிக்கிழமை இன்று நடைபெறவுள்ளது. தனியார், நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கெனவே முடிவடைந்து விட்டன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமையுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. எனவே, நிகழ் கல்வியாண்டுக்கான வேலைநாள்கள் ஏப்ரல் 20-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.

முன்கூட்டியே முடிக்கப்பட்ட தேர்வுகள்

வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு 10 நாள்கள் முன்னதாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் தேர்வுகளை முன்கூட்டியே நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மே மாதம் மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10 நாள்களுடன் மே மாத விடுமுறையும் சேர்த்து 40 நாள்களுக்கு மேலாக மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 1-ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment