கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, April 5, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு

WELCOME

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இனி என்னவாகும் ஓர் அலசல்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனோ வைரசால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது


இந்தப் பொதுத் தேர்வு இனி நடக்குமா நடக்காதா இன்னும் சந்தேகம் மாணவர்களிடையே எழுந்துள்ளது
தமிழக அரசு தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனோ வைரஸ் பரவி வருவதால் பொதுத்தேர்வு தேதி பின்னர் குறிப்பிடப்படும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனோ வைரஸ் பரவி வருவதால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இனி நடைபெறுமா என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது

கொரோனோ வைரஸின் இந்நிலை மேலும் தொடர்ந்தால் தமிழக அரசு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது

புதிய திட்டம் எவ்வாறு அமைந்திருக்கும்

ஏப்ரல் 15க்குள்  கொரோனோ வைரஸ் கட்டுக்குள் வந்தால் ஏப்ரல் இறுதி வாக்கில் மீண்டும் பத்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு நடத்தப்படும்

கொரோனோ வைரஸ் கட்டுக்குள் வரவில்லை என்றால் நடந்த முடிந்த தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது

முதலாவதாக காலாண்டில் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். மாவட்ட வாரியாக வினாத்தாள் வடிவமைப்பு மாறியுள்ளதால் மதிப்பெண் வழங்குவதில் இதிலும் சிரமம் ஏற்படும்

இரண்டாவதாக நடந்து முடிந்த மூன்று திருப்புதல் தேர்வு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

மாணவர்கள் எடுத்துள்ள மூன்று திருப்புதல் தேர்வு மதிப்பெண்களையும் கூட்டி மூன்றால் வகுத்து வரும் மதிப்பெண்ணை மாணவர்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மூன்றாவதாக காலாண்டு அரையாண்டு மூன்று திருப்புதல் தேர்வு போன்றவற்றின் மொத்த மதிப்பெண்களை கூட்டி அதனை ஐந்தால் வகுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன நடக்கும் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment