கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, May 9, 2020

இவர்கள் இன்னும் இருக்கிறார்கள்

WELCOME
இவர்களெல்லாம் இன்னமும்
இருக்காங்க இங்கே...
சொன்னால் நம்புங்க..

1. ஆடையின்நோக்கம் அறிந்து கெளரவமாக அணியறபொண்ணுங்க.
.
2. மது என்றாலே முகத்தை சுழிக்கும் இளைஞர்கள்.
.
3. கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க
.
4. எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்
.
5. அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமையா பதில் சொல்ற பிள்ளைங்க
.
6. ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் ,  தான் உண்டு தன் வேலை உண்டு என்று குடும்ப பொறுப்புணர்ந்த
இளைஞர்கள்
.
7. மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் இன்னமும் நேசிக்கும் பெண்கள்
.
8. பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படற பொண்ணுங்க.
.
9. மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்
.
10. சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என!

11. தெரியாததை தெரியாது என்று சொல்பவர்கள்

12.  உயிர் வாழ்தலுக்காக கடுமையாக உழைக்கும் உழைப்பாளர்களை பார்த்து மனம் கசியும் நல்ல உள்ளங்கள்

13.  தன்னால் முடிந்ததை சிறு உதவியாக இருந்தாலும் மனமுவந்து செய்பவர்கள்

14.  உடல் நலமில்லாதவர்கள் நலம் பெற வேண்டும் என்று பாசாங்கு இல்லாமல் பிரார்த்திப்பவர்கள்.

15.  தன்னன நாடி வாழ்வில் மனம் நொந்து வருபவர்களை, உற்சாகமூட்டி வாழ்வில் நம்பிக்கை ஊட்டுபவர்கள்.

16. மத நல்லிணக்கணத்தோடு எல்லோரையும் அரவணைப்பவர்கள்

17.  தீய எண்ணங்கள் மனதில் தவறி தோன்றினால் கூட துடிப்பவர்கள்.

18.  நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்று தன்னை சுற்றி அன்பு உலகம் படைப்பவர்கள்.

சொல்லிக் கொண்டே போகலாம்.

வாழ்க்கை இனியது.
எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில்..

No comments:

Post a Comment