கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, March 9, 2016

இறையன்பும் சிந்தனை வளமும்

இறையன்பு I.A.S அவர்கள் பல்வேறு சிந்தனைகளை நாம் வாழ்வில் முன்னேற வழங்கியுள்ளர்.
அவற்றில் சில :
* நாம் எதைக்கண்டு பயந்து ஓடுகிறோமோ அது நன்மை பயமுறுத்துகிறது.
* பயம் நம்முடைய சிந்தனையை மழுங்கடிக்கிறது.நம்முடைய ஆற்றலை குறைத்து விடுகிறது.
* தன்னை யார் புத்திசாலி இல்லை என நினைக்கிறனோ அவனே புத்திசாலியாக முடியும்
* வாழ்க்கை என்பது அடுத்தவரிடம் கற்றுக் கொள்வது.அவர்கள் அனுபவங்களிலிருந்து நம்மை உருவாக்கிக் கொள்வது.
*தொடர்ந்து மாணவனாக இருக்கச் சம்மதிப்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாகத் திகழ முடியும்
* உணராத ஆற்றலும் ஊறாத நீரும் தாகத்தைத் தணிக்க முடியாது.
* பலர் குறிக்கோளை வரையறுக்கிறார்கள்.ஆனால் சிலர் மட்டுமே அதில் உறுதியாக இருக்கிறார்கள்
* வலியைப் பொறுத்துக் கொள்ளாத மூங்கில் எப்படி  புல்லாங்குழல் ஆக முடியும்.
*சுகவாசிகள் இருக்கும் நாட்டில் விலைவாசியும் அதிகமாகத்தான் இருக்கும். 
தொகுப்பு :  டாக்டர். சுந்தர ஆவுடையப்பன் எழுதிய இறையன்புவின் சிந்தனை வானம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி. வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment