பூமி தினமானது ஆண்டு தோறும் ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரான ஜான் மெக்கானெல் என்பவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்தார். ☘
மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார். ☘
அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும், மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்த அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள்.
அன்றிலிருந்து ஆண்டுதோறும் பூமி தினம் 175 நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment