கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 22, 2016

நாடும் சிறப்பும்

* கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.

* உலகிலேயே மிகப்பெரிய தொங்கு பாலம் உள்ள இடம் ஜப்பான்.

* எதிர்க்கட்சியே இல்லாத நாடாளுமன்றம் உள்ள நாடு சிங்கப்பூர்.

* 13 தீவுகளைக் கொண்டது இந்தோனேஷியா.

* உலகில் தாயின் பெயரிலுள்ள முதல் எழுத்தை இனிஷியிலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.

* பரப்பளவில் உலகில் பெரிய நாடு ரஷ்யா.

* மிக உயரத்திலுள்ள நாடு திபெத்.

* சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம், மற்றும் மலாய் ஆகிய 4 ஆட்சி மொழியாகும்.

* உலகில் பெரிய கோட்டை அரண்மனை இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘விண்ட்சர்’ அரண்மனைதான்.

* இந்தியாவிற்கு அருகில் சிறிய ஆசிய நாடு மாலத்தீவு. இதில் மொத்தம் 1100 தீவுகள் உள்ளன. அனால் 190 தீவில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.

* உலகில் அதிகம் கிராமங்கள் உள்ள நாடு இந்தியா. ஏறத்தாழ 10 லட்சம் கிராமங்கள் உள்ளன. இந்தியாவில் உத்திரபிரதேசத்தில்தான் அதிக கிராமங்கள் உள்ளன.

* உலகிலேயே மிகப்பெரிய விமானக் கட்டுமானக்கூடம் பிரான்ஸ் நாட்டிலுள்ள 'டூன்ஸ்' என்ற நகரில் உள்ளது.

* வெற்றிலையை முதன்முதலில் பயிரிட்ட நாடு மலேசியா.

* 'உலகின் சர்க்கரைக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் நாடு கியூபா.

* தக்காளியின் தாயகம் அமெரிக்கா.

* முதன்முதலில் வரி கட்டும் முறையைக் கொண்டு வந்த நாடு எகிப்து.

* மங்கோலியர்கள் தங்கள் நாட்டை தெய்வத்தின் நாடு என்று கூறுகிறார்கள்.

* நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே. இது ஐரோப்பிய நாடு.

* முதன் முதல் டெலிபோன் டைரக்டரி வெளியிட்ட நாடு இங்கிலாந்துதான். ஆண்டு 1880.

* ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்தானே? இரண்டு பிரதமர் உள்ள நாடு சான்மரினோ.

* உலகிலேயே மிகப் பழமையான ரயில் நிலையம் இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரிலுள்ள 'லிவர்பூல் ரயில் நிலைய'மாகும்.

* விமானப் போக்குவரத்து முதன்முதலாகத் தொடங்கிய நாடு இங்கிலாந்து ஆகும்.

* 'கிராம்புகளின் தீவு' என்று அழைக்கப்படும் நாடு மடகாஸ்கர் ஆகும்.

* அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரியா ஆகும்.

* திராட்சைத் தோட்டம் அதிகம் உள்ள நாடு 'மால்டோவா' என்ற குடியரசு நாடாகும்.

* தென் அமெரிக்காவுக்கு ‘பறவைகளின் கண்டம்’ என்ற பெயரும் உண்டு.

* கோலாலம்பூர் என்றால் ‘மண்மேடு’ என்று பொருள்.

* தமிழ் இலக்கியத்தில் பர்மாவின் பெயர் ‘கடாரம்’.

* உலகில் ஊழலில் முதலிடம் வகிக்கும் நாடு நைஜீரியா.

* மகாத்மா காந்தி உருவம் பொறித்த தபால் தலையை முதலில் அமெரிக்காதான் வெளியிட்டது.

* ‘புன்னகை நாடு’ என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

* பூடான் நாட்டில் சினிமா தியேட்டர்கள் கிடையாது.

* உலகிலேயே மிகவும் நீளமான சாலைப் போக்குவரத்து அமெரிக்காவிலுள்ள பான் அமெரிக்கன் நெடுஞ்சாலையாகும். இது மெக்சிகோவில் தொடங்கி சிசிலி வரை செல்கிறது.

* உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800 மைல். இது மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டோக் வரை செல்கிறது.

* உலகில் அதிகக் காடுகள் உள்ள நாடு பிரேசில்.

* 90 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு 'மியான்மர்'.

* முதன்முதலாக சீனாவில்தான் பட்டாசு தயாரிப்பு தொடங்கியது.

* தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட ஒரே நாடு சிங்கப்பூர்.

* உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள லெனின் தேசிய நூல்நிலையமாகும்.

* ‘ரொட்டி நாடு’ என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

* உலகின் மிக நீண்ட ரயில் பாதை ‘டிரான்ஸ் –சைபிரியன் ரயில் பாதை’.

* ‘பனிக்கண்டம்’ என்று அழைக்கப்படுவது அண்டார்டிகா.

* உலகிலேயே மிகப்பெரிய நூலகம் லெனின் நூலகம். இது ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ளது.

* உலகில் முதன்முதல் தேர்தலில் பெண்களுக்கும் வாக்குரிமை தந்த நாடு நியூசிலாந்துதான். ஆண்டு 1918.

* நிலப்பரப்பில் உலகில் இரண்டாவது பெரிய நாடு கனடா ஆகும்.

* உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை சீனாவில் உள்ளது.

* உலக வாணிய நிறுவனத்தின் தலைமையகம் உள்ள இடம் ஜெனிவா.

* ஒரு நாட்டுக்கு ஒரு தேசியக்கொடிதானே? உலகில் இரண்டு தேசியக்கொடி கொண்ட நாடு எது தெரியுமா? ஆப்கானிஸ்தான்.

* நாம் எழுதிட வலது கையைப் பயன்படுத்துகிறோம். வலது – இடது என இருகையாலும் மாணாக்கர்களுக்கு எழுதப் பயிற்சி தரும் நாடு ஜப்பான்.

* உலகிலேயே கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் நாடு இஸ்ரேல்.

* உலகிலேயே காபி அருந்தும் நபர்கள் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா.

* தேசியக்கொடி இல்லாத நாடு மாசிடோனியா.

* பனி மலைகள் அதிகம் நிறைந்த நாடு சுவிட்சர்லாந்து.

* உலகிலேயே மிகப்பெரிய வைரச்சுரங்கத்தின் பெயர் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி.

* உலகிலேயே மிகப்பெரிய அணை அமெரிக்காவிலுள்ள கிராண்ட் கெளல் அணை.

* பசிபிக் பெருங்கடலின் சாவி என்று அழைக்கப்படும் நகரம் சிங்கப்பூர்.

* 'தங்க ரதங்களின் நாடு' என அழைக்கப்படுவது மியான்மர்.

* 'ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்' என அழைக்கப்படும் நாடு சுவிட்சர்லாந்து.

*'ஐரோப்பாவின் போர்க்களம்' என அழைக்கப்படும் நாடு பெல்ஜியம்.

*'வெள்ளை யானைகளின் நாடு' என அழைக்கப்படுவது தாய்லாந்து.

*'ஐரோப்பாவின் நோயாளி' என அழைக்கப்படும் நாடு துருக்கி.

* 'ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு' என அழைக்கப்படுவது பின்லாந்து.

* நதிகளே இல்லாத நாடு சவூதி அரேபியா.
* பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் 'மெக்சிகோ'.
   தொடரும்

No comments:

Post a Comment