கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, April 26, 2016

கோடை வெயிலை சமாளிக்க

கோடைக் காலத்தில் சாப்பிட வேண்டியவை, சாப்பிடக் கூடாதவை: 

தண்ணீர்

கோடைக் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்வதற்கு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

பழங்கள்

பப்பாளி, மாம்பழம், கிர்ணிப் பழம், தர்பூசணி, போன்றவற்றை உட்கொள்ளலாம். பெரி வகையை சார்ந்த பழங்களில்: ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, கூஸ்பெரி, ராஸ்பெரி ஆப்பிள், செர்ரி போன்றவை உட்கொள்ளலாம். 

காய்கறிகள்

பாகற்காய், கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தவிர்க்க வேண்டியவை

குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்துவிட்டு லெமன் ஜூஸ், இளநீர், நீர்த்த மோர்,ப்ரெஷ் ஜூஸ் குடிக்கத் தொடங்குங்கள்.

மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியாக பானம் அருந்துவது அந்த நேரத்துக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். 

வடை, அப்பளம், சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.

சூடான, மசாலா உணவுப் பதார்த்தங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment