கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, April 27, 2016

மே தினம் தோற்றம்

ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக!

ஆனால், நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்?

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர் களுக்கும், பெரும்பாலான தொழில் நிறுவனங்களிலும் 8 மணி நேரம்தான் வேலை நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது.

அதற்கேற்ப ஊதிய மும் தரப்படுகிறது. இந்த 8 மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

கட்டாய வேலை

18-ம் நூற்றாண்டின் இறுதியி லும் 19-ம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் மேற்கத்திய நாடுகளில் தினமும் 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இயக்கமும் போராட்டமும்

இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கமும், அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்களும், பென்சில் வேனியா நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து போராடினர்.

1832-ம் ஆண்டு பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக் காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங் களும், சிறு வணிகர்கள் கூட்டமைப் பும் இணைந்து 1884-ம் ஆண்டு “ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியனை” உருவாக்கினர். இந்தக் கூட்டமைப்பு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியது. இது தொழிலாளர் ஒற்றுமைக்கு பெரிய அளவில் வழிவகுத்தது.

இந்தக் கூட்ட மைப்பு,1886 மே 1-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணம்.

No comments:

Post a Comment