கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 22, 2016

அறிந்ததும் அறியாததும்

* சுதந்திர இந்தியாவில் ஓட்டுரிமை உண்டு. 1956 இந்தியன் சட்டப்படி 21 வயதிற்கு ஓட்டுரிமை. திருத்தம் செய்யப்பட்டு தற்போது 18 வயதிற்கு ஓட்டுரிமை உண்டு. அதே அரசியல் சட்டம் ஒருவருக்கு தனது ஓட்டை செலுத்தாமல் இருக்கவும் உரிமை தருகிறது. அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று கூட ஓட்டுப்போடாமல் திரும்பலாம். அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விதிகள் 41-O மற்றும் 49-O. இதனை அளிக்கிறது.

* 'இந்தியாவின் அணிகலன்' என்று அழைக்கப்படும் மாநிலம் மணிப்பூர்.

* கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் நாசிக்.

* இந்தியாவின் இணையற்ற கவிஞர் தாகூர். இவரது இயற்பெயர் ரவீந்திரநாத் தாகூர் என்றுதானே நினைக்கிறோம். அவரது இயற்பெயர் ‘பானுசின்கா’ என்பதாகும்.

* இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவின் பெயர் கிறிஸ்துமஸ் தீவு. 1643. கிறிஸ்துமஸ் நாளில் இது கண்டுபிடிக்கப் பட்டதால் இப்பெயர் வந்தது.

* இந்தியா விமான சர்வீஸ் AIR INDIA, - INDIAN AIRLINES என்று இருவிதமாக அழைக்கப்படுவது ஏன்? ஏர் இந்தியா என்பது வெளிநாட்டு விமானப் போக்குவரத்து, ஏர்லைன்ஸ் என்பது உள்நாட்டுப் போக்குவரத்தின் பெயர்.

* இந்தியாவில் சமூக சீர்திருத்தம் என்பதற்கு வித்திட்டவர் ராஜாராம் மோகன்ராய். சாதி ஒழிப்பு – பால்ய விவாகம் தடுப்பு, சதி என்ற உடன் கட்டை ஏறுதலை தடுத்தல் இவர் தொடங்கி வைத்ததே. இவருக்கு துணையாக நின்றவர் அப்போதைய ஆங்கிலக் கவர்னர் பெண்டிங் பிரபு.

* முழுக்க முழுக்க கல்வி வளர்ச்சிக்கென மட்டுமே பயன் தரும் செயற்கைக்கோள் என்பதை முதன்முதலில் இந்தியா விண்ணில் அனுப்பியுள்ளது. எந்த உலக நாடுகளும் இதுவரை இத்தைகைய செயற்கைக்கோளை அனுப்பியதில்லை. இந்த செயற்கைக்கோள் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா தளத்தில் இருந்து 20.09.2004 அன்று ஏவப்பட்டது. இதனை அனுப்ப, 49 மீட்டர் உயரமும், 3 அடுக்குகளையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.எப்.டி. ராக்கெட் மூலம் இது அனுப்பப்பட்டது. 17 நிமிடத்தில் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது. இந்த செயற்கைக்கோள் 1950 கிலோ எடை உள்ளது. பல்வேறு பல்கலைக் கழக, தொலைதூரக் கல்விக்குப் பயன்படும். ‘எஜுசாட்’ என்பதே இந்த செயற்கைக்கோள். இந்திய அறிவியல் திறனுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

* உலகின் பெரிய, பழமையான பல்கலைக்கழகம் வட இந்தியாவில் இருந்தது. இருந்த இடம் தட்சசீலம். காலம் கி.மு. 700. உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். மருத்துவம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், தத்துவம் எனப் பல்துறைப் படங்கள் போதிக்கப்பட்டன. ஏறத்தாழ 60 வகை படிப்புகள், 10,000 மாணவர்கள் பயின்றனர். கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் சிறப்பிடம் பெற்றது, புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம்.

* எண் கணிதத்தில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 இதுவும், (௦) பூஜ்யமும் இந்தியா உலகிற்கு அளித்த நன்கொடை. இந்தோ – அரேபியா முறை என இது வழங்கப்படுகிறது. வெளியுலகிற்கு இதனை அறிமுகம் செய்தவர்கள் அரேபியா வணிகர்கள். அதுபோல அல்ஜிப்ரா கணிதமும் இந்தியா வழங்கியதே.

* உடல் பருமன் அதிகமுள்ள மக்கள் வசிக்கும் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

* இத்தாலி – பைசா நகரில் ஒரு சாய்ந்த கோபுரம் இருப்பதும், அது உலக அதிசயத்தில் ஒன்று என்பதும் தெரியும். ஒரு சாய்ந்த கோபுரம் இந்தியாவிலும் உள்ளது. ஒரிஸா மாநிலத்தில் ஹியூமா என்ற கிராமத்தில் இது உள்ளது. 47 கோணத்தில் இது சாய்வாக உள்ளது. 1670 கி.பி.யில் பளியர்சிங் என்ற அரசரால் கட்டப்பட்டது.

* இந்தியாவின் தலைநகர் புதுதில்லி 1911-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

* நமது தேசியக் கொடியை உருவாக்கியவர் பிக்காஜி ருஸ்தம்காமா இதில் நடுவே அசோகச் சக்கரமா? ராட்டையா? என்ற சர்ச்சை எழுந்தது. மகாத்மா காந்தி ராட்டையை வைக்கவே விரும்பினார். ஆனால் அம்பேத்கார் அசோகச் சக்கரம் இருக்க ஆசைப்பட்டார். இறுதியில் காந்தி விட்டுக்கொடுக்க, அம்பேத்கார் விருப்பமே நிறைவேறியது.

* பால்வளப் பெருக்கம், வெண்மைப் புரட்சி எனப்படுகிறது.
இந்தியாவில் பால்வளப் புரட்சிக்கு வித்திட்டவர் வர்கீஸ் குரியன் என்பவர். பசுமைப் புரட்சி உணவு உற்பத்தி. நீலப்புரட்சி கடல் வலப் பாதுகாப்பு.

* தில்லி நகருக்கு ‘புதுதில்லி’ என்ற பெயர் 1931 –ஆம் ஆண்டு சூட்டப்பட்டது.

No comments:

Post a Comment