போடுவோம் ஓட்டு-வாங்க மாட்டோம் நோட்டு'' என்ற உறுதிமொழியை ஒரு கோடி பேர் செவ்வாய்க்கிழமை ஏற்கவுள்ளனர்.
வாக்குக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் தமிழகத் தேர்தலில் பெரும் பிரச்னையாக உள்ளது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, ""போடுவோம் ஓட்டு-வாங்க மாட்டோம் நோட்டு'' என்ற உறுதிமொழியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு கோடி பேர் செவ்வாய்க்கிழமை ஏற்க உள்ளனர்.
தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலகங்கள் உள்பட பல இடங்களிலும் இந்த உறுதிமொழி ஏற்பு நடைபெறவுள்ளது.
சென்னையில் 10 லட்சம்:
சென்னை மாவட்டத்தில் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கின்றனர். இதற்கென அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment