மனித ஒழுக்கத்திற்கு மகத்தான காரணம் கோயில்களே.கோயில் இல்லா ஊரே இவ்வூலகில் இல்லை.ஒவ்வொரு ஊரிலும் நான்கு ஐந்து கோயில்கள் உள்ளன.
கோயில் அவசியம்
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்''
''ஆலயம் தொழுவது சாலமும் நன்று''
ஆகிய பழமொழிகள் கோயில்களின் சிறப்பை விளக்குகின்றது.
அனைத்து மதங்களும் கடவுளை வழிபடுவதன் முலம் முக்தி அடையலாம் என கூறுகிறது.
இறைவன்இல்லாத இடமே இல்லை. தூணிலும் இருப்பார்,துரும்பிலும் இருப்பார்.அவர் எங்கும் இருக்கிறார்.
பசுவும் கோயிலும் ஒன்று
பசுவின் ரத்தமே நமக்கு பால். பசுவின் உடல் முழுவதும் அதன் ரத்தம் பரவி ஓடுகின்றது. ஆயினும் பசுவின் மடியில் இருந்து மட்டுமே நமக்கு பால் கிடைக்கிறது.
அதனைப் போல எங்கும் பரவி நிறைந்திருக்கும் இறைவனின் அருளையும், அன்பையும் பெற நாம் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
கோவிலில் இறைவனின் கருணையும், அருளும் நிறைந்து இருக்கிறது.
கோயிலில் மட்டுமே மன அமைதி கிடைக்கும்.
No comments:
Post a Comment