கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, May 5, 2016

தமிழ் சிறப்புகள்


* திருக்குறள் 133 அதிகாரம் கொண்டது. ஒரே பெயரில் இரண்டு அதிகாரம் உண்டு. அது ‘குறிப்பறிதில்’ ஒன்று பொருட்பாலிலும், மற்றது இன்பத்துப் பாலிலும் உள்ளது.

* இந்தியா மட்டுமின்றி மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் தமிழ் மொழி ஆட்சி மொழியாக உள்ளது.

* தமிழ் இலக்கணம் 5 வகைப்படும்
1. எழுத்து இலக்கணம்,
2. சொல் இலக்கணம்,
3. பொருள் இலக்கணம்,
4. யாப்பு இலக்கணம்,
5. அணி இலக்கணம்.

* திருக்குறள் போலவே அறத்துப்பால் – பொருட்பால் – இன்பத்துப்பால் என மூன்று பால் பிரிவும், 40 அதிகாரம் – ஒரு அதிகாரத்திற்கு 10 பாடல் என்றும் தொகுக்கப்பட்ட ஒரே நூல் நாலடியார். இதில் 400 பாடல்கள். இதற்கு நாலடி நானூறு என்றும் பெயர். இதனை எழுதியவர்கள் பல சமண முனிவர்கள். பெயர் தெரியாது. தொகுத்தவர் பதுமனார்.

* இந்துக்கள் எழுதுவதற்கு முன்பு ‘உ’ என்று போடுவது வழக்கம். இதனை பிள்ளையார் சுழி என்கிறோம். ஆரம்பத்தில் ஓலைச் சுவடியில் எழுதும் போது, ஓலை சரியாக, கிழியாமல் இருக்குமா என்று சரிபார்க்கவே இப்படி போடப்பட்டது. பிள்ளையாருக்கும் இதற்கு சம்பந்தம் இல்லை. பிள்ளையார் வழிபாடு வருவதற்கு முன்பே ‘உ’ போடுவது வழக்கமாய் இருந்தது.

* ஆரம்பகாலத்தில் இருந்து தமிழில் எல்லாமே செய்யுள் வடிவத்திலேயே ஏழுதப்பட்டது. உரை நடையின் தந்தை ‘வீரமா முனிவர்.’ இவர் எழுதிய பரமார்த்தகுரு கதை – முதல் கதை எனலாம்.

* 'தமிழ் கருவூலம்' என்று போற்றப்படும் நூல் புறநானூறு.

* திருக்குறளில் இறைவனை எந்த இடத்திலும் வள்ளுவர் கடவுள் என்ற பெயரில் அழைக்கவே இல்லை. இறை – இறைவன் – ஆதிபகவான், வாலறிவன் என்று பல்வேறு பெயரில் சொல்வார். அதிகாரத் தலைப்பு மட்டுமே கடவுள் வாழ்த்து என இருக்கும். இதுவும் பிற்கால பெயர் சூட்டலே எனலாம்.

* பதஞ்சலி முனிவர் ‘மகாபாஷ்யம்’ என்ற நூலை எழுதினார்.

* 99 வகையான மலர்களைப் பற்றி பேசும் தமிழ் இலக்கிய நூல் 'குறிஞ்சிப்பாட்டு'.

* நான்கு வகைக் கவிஞர்கள்: ஆசு கவிஞர்,
மதுரக் கவிஞர்,
சித்திரக் கவிஞர்,
வித்தாரக் கவிஞர்.

* திருக்குறளைப் போல் நாலடியார் அறம், பொருள், இன்பம் என முப்பாலாய் படைக்கப்பட்ட நூலாகும்.

* முதல் உலகத் தமிழ் மாநாடு கோலாலாம்பூரில் நடந்தது.

நன்றி . தொடரும்

No comments:

Post a Comment