கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, May 9, 2016

வீட்டை பராமரிக்கும் வழிகள்

வீட்டில் மனிதர்கள் புழங்கினாலும் அல்லது பூட்டப்பட்டு இருந்தாலும் வீட்டின் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும்.

பண்டிகைகள் மற்றும் விஷேச காலங்களில் மட்டும் வீட்டை சுத்தம் செய்து பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வது சிலருடைய வழக்கமாக இருக்கிறது. அப்படியில்லாமல் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களில் சின்ன சின்ன பராமரிப்பு வேலைகளை செய்து வந்தால் பெரிய வேலைகள் காரணமாக நமக்கு வரும் ‘டென்ஷன்’ வராது என்பது ‘ஹவுஸ் கீப்பிங்’ துறை அனுபவசாலிகளின் கருத்தாகும்.

வீடு நிறைய பொருட்கள் இருந்தாலும், குறைவான பொருட்கள் இருந்தாலும் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். சுகாதாரமான வாழ்க்கை அமைவதற்கு ‘ஹவுஸ் கீப்பிங்’ நிபுணர்கள் தரக்கூடிய சில ‘டிப்ஸ்கள்’ பற்றி இங்கே பார்ப்போம்.

* வீட்டின் மெயின் டோர்கள் மரத்தாலும், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும், பெரிய அளவிலும் இருப்பது வழக்கம். காற்றால் அடித்து வரப்படும் தூசி தும்புகள் வீட்டுக்குள் வருவதற்கு முன்பாக கதவுகளின் மீதுதான் படிகின்றன. ‘வுட் கார்விங்’ எனப்படும் மர வேலைப்பாடுகள் உள்ள ‘மெயின் டோர்களின்’ சின்ன இடுக்குகளில் தூசியும், மண்ணும் அடைத்துக்கொண்டு கதவின் மெருகு குறைந்து காணப்படும்.

சாதாரணமாக ஈரத்துணியால் துடைப்பதால் மட்டும் அவை போகாது. நுட்பமான மர வேலைப்பாடுகள் இருக்கும் பகுதிகளில் சிறு குச்சியில் பஞ்சை சுற்றி அதில் ‘கிளீனிங் ஆயில்’ தடவி துடைத்து விட வேன்டும். அல்லது ‘ கிளீனிங் ஆயில்’ கொண்டும் ‘ஸ்பிரே’ செய்து விட்டு துணியால் துடைத்து விடலாம்.

* ‘டைல்ஸ்’ மற்றும் ‘மார்பிள்ஸ்’ ஒட்டப்பட்ட தரை தளத்தை துடைத்து விடுவதற்கு ‘மாப்’ எனப்படும் துடைக்கும் குச்சியால் சுத்தம் செய்து வருவது வழக்கமாகும்.

தரையை சுத்தம் செய்வது ஒரு வேலை என்றால் அதன் ஈரத்தை பிழிவது இன்னொரு வேலையாக இருக்கும். அவ்வப்போது அதை பிழிந்து விடுவதற்காக ஒரு உபகரணம் இப்போது வந்து விட்டது. அதன் பெயர் ‘டிரை மாப் மெஷின்’ ஆகும்.

கைகளால் இனி ‘மாப்பை’ பிழிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஈரமான மாப்பை அந்த கருவியில் வைத்தால் போதும். அது ஈரத்தை உறிஞ்சி விட்டு காய்ந்த ‘மாப்பாக’ மாற்றி விடும். பிறகு சுத்தப்படுத்தும் வேலையை எளிதாக செய்யலாம்.

* இப்போது கோடை காலமாக இருப்பதால் வீடுகளில் ‘ஏ.சி’ பயன்பாடு அதிகமாக இருக்கும். அவ்வப்போது அது ‘ரிப்பேர்’ ஆகி விடாமல் தடுப்பதற்கு ‘ஏர் கண்டிஷன் ஸ்பெஷலிஸ்டுகள்’ நான்கு குறிப்புகளை தருகிறார்கள்.

1. ‘பில்டர்’ பத்து நாட்களுக்கு ஒரு முறை கழற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

2. குறைவான மின்னழுத்தம் இருக்கும்போது ‘ஏ.சி’யை இயக்க கூடாது.

3. ஒரு நாளில் தொடர்ந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் இயங்குவதும் கூடாது.

4. நன்றாக இயங்கினாலும் 90 நாட்களுக்கு ஒரு முறை முழு சர்வீஸ் செய்வது அவசியம்.

* குளியலறையில் இருக்கும் ‘வாட்டர் ஹீட்டர்’ சாதனமானது, நீர் சூடானவுடன் தாமாக ‘ஆப்’ ஆகிவிடுகிறதே என்று எல்லா சமயங்களிலும் மின் இணைப்பில் வைத்திருப்பது கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே ‘ஆன்’ செய்து உபயோகப்படுத்த வேண்டும்.

சூடான நீர் நேரடியாக ‘பாத் டப்பில்’ விடப்படுவதை தவிர்க்க வேண்டும். சிறிய பாத்திரத்தில் அல்லது ‘பக்கெட்டில்’ பிடித்து வைத்து ‘டப்பில்’ உள்ள தண்ணீரோடு கலந்து கொள்ள வேண்டும். ‘ ஹீட்டரில்’ எப்போதும் ஒரே வகையான வெப்ப அளவு இருப்பது போன்று பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

No comments:

Post a Comment