கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, June 25, 2016

தீபாவளியும் எண்ணெய் குளியலும்

தீபாவளி வந்துட்டாலே எண்ணெய்க் குளியல்தான் முதலில்... ஏன் தெரியுமா ?

தீவளிக்குத் தீவளி எண்ண தேச்சு நீ குளி..னு ஒரு பாட்டுகூட வரும்...அதாவது வருடத்தில் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதை அப்படி சொல்றாங்க.

ஆனா வாரத்தில் ஒரு முறை எண்ணெய்க் குளியல் மிக மிக அவசியமான ஒன்று.
அதனாலதான் 'சனி நீராடுனு' சொல்லிருக்காங்க.

* நம்ம உடலில் இருக்குற வியர்வைத் துவாரங்கள் வழியாத்தான் வியர்வை வெளியேறும்னு எல்லாருக்குமே தெரியும். எண்ணெய் தேய்க்கும்போது வியர்வைத் துவாரங்கள் வழியா எண்ணெய் உள்ளே போய் நம்ம தோலை மிருதுவாக்கறதோடல்லாம தோலின் அடியில் உள்ள அழுக்குகளையும் வெளியே கொண்டு வருகிறது.

* நல்லா அரை மணிநேரம் தேய்ச்சு, கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்கு ரெண்டு ரெண்டு சொட்டு எண்ணெய் விட்டு, கை, கால், முதுகு, இடுப்பு எல்லாம் நல்லா தேய்ச்சு ஊற விட்டு அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணில சீயக்கா தேச்சுக் குளிச்சா.... அடடடா என்னா அருமையா இருக்கும்...

* இப்படி எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறதால உடல் வறட்சி, தலைவலி, உடல் வலி இதெல்லாம்கூட வராது. கண் ஒளி பெறும். உடல் வலிமை பெற்று ஆயுளும் கூடும். நம்ம தோல் மென்மையா, பளபளப்பாகும். சோர்வு, கபம், தூக்கமின்மை எல்லாம் பறந்தோடும்.

* நல்லெண்ணெய் சேராதுன்னு சொல்றவுங்க, அதுல ரெண்டு பூண்டு, ஒரு சின்னத் துண்டு இஞ்சி, நாலு மிளகு, விரலி மஞ்சள்துண்டு எல்லாம் சேர்த்துக் காய்ச்சி ஆற வச்சு வெது வெதுப்பா தேய்க்கலாம். அல்லது தேங்காய் எண்ணெய் தேச்சும் குளிக்கலாம்.

* பெண்கள் செவ்வாய், வெள்ளியும் ஆண்கள் புதன், சனிக்கிழமைகளில் வாரம்தோறும் எண்ணெய்க் குளியல் போடுவது மிகவும் சிறப்பு. பெண்கள் தலைக்குக் குளிச்சிட்டு சாம்பிராணி காட்ட மறந்துடாதீங்க.

No comments:

Post a Comment