கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, June 26, 2016

தெரு கூத்துவை வளர்க்கும் துவக்கப்பள்ளி

உயிர் பெறும் தெருக்கூத்து வழக்கமான முறையில்லாமல், கதைகளுக்கு உயிரோட்டம் கொடுத்து, அந்த உலகத்துக்கே அவர்களை அழைத்து செல்லும் மகிழ்ச்சியான கற்றல் முறையை செயல்படுத்தியுள்ளது ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

எதிலும் சற்று வித்தியாசத்தை மட்டுமின்றி, ஒரு நிஜத்தை விரும்புகின்றனர் இன்றைய குழந்தைகள். சுற்றிலும் சுவர் ஓவியங்கள் என பள்ளிகளில் வசீகரமான சூழல் இருந்தாலும், அந்த உலகத்துக்கு அவர்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எப்போதுமே குழந்தைகளிடம் உண்டு.

இத்தகைய விருப்பத்தை பூர்த்தி செய்து, மகிழ்ச்சியான கற்றலை செயல் படுத்தியுள்ளது இப்பள்ளி.கல்விக்கான சூழலை உருவாக்கித்தருவதோடு கல்வித்துறையின் செயல்பாடு முடிகிறது. அச்சூழலை உயிருள்ளதாக்கி, அந்த உலகத்துக்கு குழந்தைகளை கொண்டு செல்லும் திறன் ஆசிரியர்களின் கையில் மட்டும்தான் உள்ளது.

ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 50 குழந்தைகள் படிக்கின்றனர். முகபாவனைகளால் அன்று அனைவரையும் தன் வசம் ஈர்த்த தெருக்கூத்துகள் இன்று, காணாமல் போய்விட்டன. பள்ளிக்குழந்தைகளுக்கு அக்கலையை கற்றுத்தருவதோடு, அதன் மூலம் பாடம் நடத்தும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.

கற்றல் அட்டை கல்வி, தேர்வுகளை எதிர்கொள்ள உதவுகிறதே தவிர, அவர்களுக்கு பிடித்தமான கல்வியாக மாறுவது குழந்தைகளோடு குழந்தைகளாக மாறும் ஆசிரியர்களால் தான்.

இப்பள்ளியில் நுழைந்தவுடன், அழகிய பிஞ்சு முகங்கள் பலவும் நம்மை பயங்காட்டும் சிங்கம், புலியாக மாறியிருப்பதில் ஆச்சர்யமே ஏற்பட்டது. மகிழ்ச்சிகரமான கற்றல் என்ற முறையின் முதல் முயற்சியாக, விலங்குகளின் செயல்பாடுகளை, அக்குழந்தைகள் மூலமே செயல்விளக்கமளிக்கச் செய்தனர் ஆசிரியர்கள்.

அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், சினிமாக்களுக்கு அடிப்படையாக நாடகத்தை கூறி வருகிறோம். ஆனால், அதற்கும் அடிப்படையாக இருப்பது தெருக்கூத்து. நல்ல கருத்துகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க, பலரும் பயன்படுத்திய இந்தக்கலையை, இன்று பெரும்பாலானவர்கள் மறந்து விட்டனர்.

இதை பள்ளிக் குழந்தைகள் மூலம், அழியாமல் பாதுகாக்கும் செயல்தான் இம்முயற்சி. பாடங்களை, கரும்பலகைகள் மூலமே நடத்தி வரும் வழக்கமான முறையிலிருந்து விடுபட்டு, இதுபோன்ற, முகபாவனைகள் மூலம் கூத்துகளாக பாடங்களை நடத்துவதில், குழந்தைகளும் மகிழ்ச்சியடைகின்றனர்.

ஒரு உற்சாகத்தோடு பாடங்களை கவனிக்கின்றனர். தவிர, கருத்துகள், பாடங்களாக மட்டுமின்றி, ஒரு கதையாகவே அவர்கள் மனதில் பதியும் வாய்ப்பு உருவாகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து கரும்பலகையில் பாடம் படித்த காலத்தை விடவும், ஓடி ஆடி அவர்களாகவே படிக்கும் முறையே, என்றும் மனதில் பதியக்கூடியதாக இருக்கிறது, என்றனர்

No comments:

Post a Comment