கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, June 30, 2016

கல்லூரிகளில் ராக்கிங் தடுக்க உத்தரவு

கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் ராக்கிங்கில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி இயக்குனரகம் உத்தரவு

கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ–மாணவிகள் ராக்கிங்கில் ஈடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

1400 கல்லூரிகள் தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளை கொண்ட சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்பட 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன.இந்த பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 1400 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.இடங்கள் அதிகரிப்பு இந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஏற்கனவே உள்ள படிப்புகள் போக புதிய படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களை விட கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம்.அதன் காரணமாக கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மாணவர் சேர்க்கைக்கு உரிய இடங்களைவிட விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஏராளம்.

அதன் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீத இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத இடங்களும் அதிகரிக்கப்பட்டன.அதுபோல தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்தன.

அவ்வாறு கோரிக்கை வைத்த பல கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.வகுப்புகள் தொடங்கிவிட்டன இந்த நிலையில் பிளஸ்–2 முடித்துவிட்டு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிவிட்டன.

பல கல்லூரிகளில் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரவேற்கிறார்கள். இருப்பினும் ராக்கிங் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனரகம் அனைத்து கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது 

ராக்கிங் புகார் பெட்டி கல்லூரி மாணவ–மாணவிகளிடையே ராக்கிங் (பகடிவதை) நடக்காதவாறு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியவற்றை கருத்தில் கொண்டு செயல்பட சென்ற ஆண்டு அறிவுரை வழங்கியது போல இக்கல்வி ஆண்டிலும் (2016–2017) தங்கள் கல்லூரியில் ராக்கிங் நடக்காமல் இருக்க தாங்கள் முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராக்கிங் பற்றி உடனடியாக புகார் செய்ய தேர்வாகி உள்ள ஆசிரியரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அறிவிப்பு பலகையில் வைக்கவேண்டும்.ராக்கிங் புகார் பெட்டி மற்றும் ராக்கிங் ஆலோசனை பெட்டியினை அமைத்து ராக்கிங் கொடுமையினை அறவே ஒழிக்க முன் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர்களும், துறைத்தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து கடிதம் எழுதவேண்டும்.  இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment