கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, June 30, 2016

பெற்றோர் கவனத்திற்கு ! மாணவர்கள் வாட்ஸ் ஆப் .பேஸ்புக் அனுமதிக்காதீர்

மாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது

சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்களது குழந்தைகளுக்கு தனியாக வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை தொடங்கி பயன்படுத்த அனுமதிப்பதால் முன்பின் தெரியாத நபர்கள் இணையதளம் மூலமாக தொடர்பு கொண்டு நமது குழந்தைகளிடம் நயவஞ்சகமான முறையில் நல்லவர்களை போல தகவல்கள் பரிமாற்றம் செய்து, ஆபாச படங்களை காட்டி, அதுபோல ஜாலியாக இருக்கலாம் என்பது போன ஆசையை காட்டி, திருமண ஆசையை ஏற்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக கூறி தனிமையில் சந்திக்கலாம் என்று அழைத்து அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டியும் இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.

அல்லது விபசாரத்தில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்து விடுவர். எனவே தங்கள் குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் கணக்குகளை துவக்காமல் இருப்பது நல்லது.

மேலும் பொதுமக்களும், முன்பின் தெரியாமல் வரும் நபர்களிடம் இருந்து வரும் பதிவுகளை விருப்பம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

குழந்தைகளுக்கு இணையதள வசதியை பயன்படுத்துகின்ற வகையில் உள்ள செல்போன்களை வாங்கிதர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment