இறுக்கமான உடைகளை அணிந்து மாணவிகள் பள்ளிக்கு வர தடை கல்வித்துறை அதிகாரி உத்தரவு
மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இறுக்கமான உடைகளை அணிந்து வரக்கூடாது. என்று கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
ஆசிரியர்களுக்கான விதிமுறைகள்:
காலை பள்ளி துவங்கும் முன் (15 நிமிடம் முன்னதாக) அனைவரும் வர வேண்டும். மாலை நேரத்தில் கேள்வி கொடுத்து, பதிலை படித்து எழுதிய பின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
சீருடையில், சட்டை இன் பண்ணாத, அடையாள அட்டை போடாத, பட்டன் போடாத மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.
மாணவ, மாணவியருக்கான விதிமுறைகள்:
* பள்ளி நாட்களில் 9.15 மணிக்குள் வருகை தர வேண்டும்.
* பள்ளி சீருடை விவரம், பேன்ட் (பென்சில் பிட், லோகிப், டைட் பிட் அனுமதியில்லை), சர்ட் (அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும்) இறுக்கமான சட்டை அணியக்கூடாது. மாணவர்கள் சட்டையின் நீளம் இன் பண்ணும் போது வெளியில் வராத வண்ணம் அமைந்திருக்க வேண்டும். கறுப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் அணிய வேண்டும்.
கை, கால் நகங்கள், தலைமுடி சரியான முறையில் வெட்டப்பட்டு (போலீஸ் கட்டிங்) முகச்சவரம் செய்து மீசை மேல் உதட்டை தாண்டாதவாறு இருத்தல் வேண்டும்.
* கைகளில் ரப்பர் பேன்ட், கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.
மாணவிகள் இறுக்கமான உடைகளை அணிந்து வரக்கூடாது. மேலும் சுடிதார் மேலாடை இரு பக்கங்களிலும் திறப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
* பெற்றோரின் கையொப்பத்துடன், வகுப்பாசிரியர் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும்.
பைக், செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டாது. செல்போன் மதிப்புக்கான தளவாட பொருட்களை பள்ளிக்கு வாங்கி கொடுக்க வேண்டும்.
பிறந்த நாளன்றும் பள்ளி சீருடையில் தான் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment