கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, June 1, 2016

பள்ளி கல்வித்துறையின் 12 கட்டளைகள்

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு 12 கட்டளைகள் பிறப்பித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று (ஜூன் 1ம் தேதி) திறக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் 12 கட்டளைகளை பிறப்பித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

* பள்ளிகள் திறக்கும் நாளான இன்றே மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு, சீருடை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்

* பள்ளிகளில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு தூய்மை மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்வதுடன் மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பள்ளி வளாகம், குறிப்பாக வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளிலும், வகுப்பறைகளை சுற்றிலும் பிளிச்சீங் பவுடர் தூவி தூய்மைப்படுத்த வேண்டும்.

* அனைத்து வகுப்பறைகளிலும் மின்சார சுவிட்சுகள் சரியாக உள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்வதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* மாணவர்கள் உணவு இடைவேளை நேரங்களிலும், பள்ளி விட்டு மாலை வீடு திரும்பும் போதும் அருகில் உள்ள நீர்த்தேக்கங்கள், திறந்த வெளி கிணறுகளுக்கு சென்றால் வரும் ஆபத்து குறித்தும், மாணவர்கள் பைக் ஓட்டுவதால் வரும் ஆபத்து குறித்தும் இறைவணக்கத்தின் போது அறிவுரை வழங்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

* வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பாக மூடி வைப்பதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

* பள்ளியின் சுற்றுச்சுவரை ஆய்வு செய்து பாதுகாப்பை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.

* தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* தனியார் பள்ளி பஸ்களை அந்தந்த மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment