கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, July 30, 2016

குரூப் 4 தேர்வு 5451 காலிபணியிட அறிவிப்பு 15 நாளில் வெளியாகும்

குரூப்-4 தேர்வு அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பேட்டி

5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

74 காலிப்பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. 19 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணை சூப்பிரண்டு, 21 உதவி வணிகவரி அலுவலர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 74 காலிப்பணி இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடந்தது.

அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு எழுத வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அந்தவகையில், முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது.

சென்னை திருவல்லிக்கேணி, பி.வி.நாயக்கன் தெருவில் உள்ள சி.எஸ்.ஐ. கெலட் மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய
(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கே.அருள்மொழி பார்வையிட்டார். கை, கால் நடுக்கத்தால் தேர்வு எழுத முடியாத அருண்குமார் என்பவர், மற்றொருவர் உதவியுடன் தேர்வு எழுதினார். அவரையும் பார்த்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமாரும் அவருடன் இருந்தார். தேர்வு மையத்தை பார்வையிட்ட கே.அருள்மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவை சுமார் 5 மாதங்களுக்குள் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு வருகிற 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு அறிவிப்பு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு சுமார் 15 அல்லது 20 நாட்களில் வெளியாகும். இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 29 இளநிலை அறிவியல் அலுவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு இன்று (நேற்று) வெளியிடப்பட்டு இருக்கின்றன.

சிறை அலுவலர், மீன்துறை துணை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-4 மற்றும் நிலை-3 பதவிகளுக்கான தேர்வுகளும் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment