கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, July 28, 2016

நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக் - 10 லட்சம் பேர் பங்கேற்பு

நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 26ம் தேதி தலைமை தொழிலாளர் ஆணையர் அனில்குமார் நாயக் தலைமையில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 9 வங்கி யூனியன்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்திய வங்கியாளர் சங்க அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டப்படி நாளை ஒரு நாள் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம் உள்பட 9 சங்கங்களில் இருந்து 10 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம், இணைச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது :

கடந்த மே மாதம் 11ம் தேதி அகில இந்திய வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் கூட்டம் நடந்தது. இதில் 9 வங்கி யூனியனை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், “பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை நிறுத்த வேண்டும், வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகள் மீது திணிக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தலைமை தொழிலாளர் நல ஆணையர் அனில்குமார் நாயக்குடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்று கூறுகிறார்களே தவிர, எங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவாதமும் வழங்க முன்வரவில்லை.

இதனால், நாளை திட்டமிட்டப்படி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் 43 வணிக வங்கிகள், 50 கிராமிய வங்கிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வங்கிகள் ஸ்டிரைக் காரணமாக நாளை பண பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment