கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, July 27, 2016

புத்திசாலிதனத்தால் உயிர் பிழைத்த குரங்கு

முட்டாள் முதலையும் புத்திசாலிக் குரங்கும்

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.

 ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டு வரமுடியுமா? என கேட்டது.

 ஆண் முதலை யோசித்தது என்ன செய்வதென்று, திடீரென ஒரு யோசனை வந்தது. சரி நான் கொண்டு வருகிறேன் என சம்மதித்தது.

நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூறியது.

அதனை கேட்ட பெண் முதலைக்கோ அளவு கடந்த சந்தோசம்.  

அடுத்த நாள் ஆண் முதலை, குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.  

நடு ஆற்றில் சென்றுக் கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது, இப்போ நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா எனக் கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானேன்னு சொன்னது.  

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை கூட்டிகிட்டு போறேன் எனக் கூறியது.

குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.  

சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாது? நேத்து தான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன்.

அது அங்கேயே இருக்கின்றது எனக் கூற முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துக்கொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது.

 தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போயிடுச்சாம். 

நீதி
எதையும் ஆராயாமல் செய்தால் ஆபத்தில் தான் முடியும்

No comments:

Post a Comment