கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, September 30, 2016

ஆண் என்பவன்

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது ========

ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..

பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்

காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்

மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..

இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன் அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்

அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்.

வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்.

குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம்,

கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம்,

அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்..

தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்;

மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

No comments:

Post a Comment