கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, September 30, 2016

பெண்களின் மாத விலக்கு பிரட்சனைக்கு

மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவ முறைகள்

நலம்தரும் நாட்டு மருத்துவத்தில், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னைக்கு தீர்வுகாண்பது குறித்து பார்க்கலாம்

குழந்தைபேறுக்கு மாதவிலக்கு முக்கிய அம்சமாக விளங்குகிறது. மாதவிலக்கு முறையாக இல்லாமல் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது.

மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கால் ரத்த சோகை ஏற்படுகிறது.

மாதவிலக்கு பிரச்னைக்கு வில்வம், அத்தி, மாதுளை போன்றவை அற்புதமான மருந்தாகிறது.

எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை, மாதுளை, பனங்கற்கண்டு. அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை ஆகியவற்றை சுத்தப்படுத்தி ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும்.

இதனுடன் மாதுளம் பழத்தின் தோல், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை என இருவேளை 100 மில்லி அளவுக்கு குடித்துவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.

இந்த தேனீர் மூலம் நோய்க்கு மருந்தாக அமைகிறது. மாமரம் மற்றும் அத்தி மரத்தின் பட்டை, மாதுளை ஆகியவை மாதவிலக்கு பிரச்னைக்கு நல்ல பலன் தருவதாக அமைகிறது.

வில்வ இலையை பயன்படுத்தி அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

வில்வ இலை, செம்பருத்தி. 50 முதல் 100 மில்லி அளவுக்கு குளிர்ந்த நீர் எடுக்கவும். இதில், சிறு நெல்லிகாய் அளவுக்கு வில்வ இலை பசை சேர்க்கவும். சிறு நெல்லிக்காய் அளவுக்கு செம்பருத்தி பூ பசை சேர்க்கவும். பின்னர், நன்றாக கலந்து காலை, மாலை என இருவேளை குடித்துவர அதிக உதிரப்போக்கு நிற்கும்.

செம்பருத்தி துவர்ப்பு சுவை உடையது. பல்வேறு நன்மைகளை கொண்ட செம்பருத்தி மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது. துவர்ப்பு சுவை உடைய பொருட்கள் ரத்தத்தை கட்டுப்படுத்த கூடியது.
ரத்தத்தை கெட்டிப்படுத்தும் தன்மை கொண்டவை.

மாசிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய், தேன். அரை ஸ்பூன் அளவுக்கு மாசிக்காய் பொடி எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

No comments:

Post a Comment