கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, February 1, 2017

சிரிக்க சிரிக்க

😅 சிரித்து சிரித்து வாழ்க😅

😅 ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....???

ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்

😅😅😅 😅 😅

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....

மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...

😅😅😅 😅 😅

டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!! முதல் உதவி என்ன செஞ்சீங்க....???

வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்....!!!

😅😅😅 😅 😅

கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே....???''

டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்......??? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே....!!!''

😅😅😅 😅 😅

"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."

"அப்ப... கீழே இருந்து மேலே போனால்....???"

"அது.... குருவி....!!!"

😅😅😅 😅

😅 ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே....??? உங்களுக்குத் தெரியுமா.....???

நண்பர்: தெரியுமாவாவது....??? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்.

😅😅😅 😅 😅

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது."

😅😅😅😅 😅

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்...???

ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.

வேற எதாவது பெரிசா சொல்லு.

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு....???

😅😅😅 😅

😅 (பரீட்சை ஹாலில்) 😅 ரகு : வயித்தைக் கலக்குதுடா.

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு அப்பவே சொன்னேன், கேட்டியா...???

😅😅😅 😅 😅

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்...???

ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்.....!!!

😅😅😅 😅 😅

வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க, டிரெயினைப் புடிக்கணும்.....!!!

கடைக்காரர்: சாரி சார்....!!! டிரெயின் புடிக்கிற அளவுக்குப் பெரிய பை எங்க கடையில இல்லியே...!!!

😅😅😅 😅 😅

இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்

அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்

😅😅😅 😅 😅

"கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"

"நூத்தி இருபது ரூவா"

"எப்போ குறையும்?" "அளந்து ஊத்தும்போதுதான்...."

😅😅😅 😅 😅 😅

😅😅😅😅😅😅😅சிரிங்க சிரிங்க 😅😅😅😅😅😅😅😅😅

No comments:

Post a Comment