கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, February 20, 2017

பேயா அலைய விடலாமா ?

1.ஒருவர்: டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?

டாக்டர்: ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?

2 .டாக்டர்: நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.

நோயாளி: டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு

3. நோயாளியின் மகன்: டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க...

டாக்டர்: ஏன்?

நோயாளியின் மகன்: சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல...

4. நோயாளி: டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...

டாக்டர்: சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!

நோயாளி: ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?

டாக்டர்: நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...

5 .டாக்டர்: உங்க மாமியாரைக் காப்பாத்துறது கஷ்டம்.

மருமகள்: நீங்க நல்ல டாக்டர்னு எல்லாரும் சொன்னது இப்பத் தான் டாக்டர் புரியுது.

6 .நோயாளி: என் வீட்டுக்காரர், பண்ண காரியத்தையே ஞாபகமறதியா ரெண்டாவது தடவை மறுபடியும் பண்றாரு டாக்டர்..

டாக்டர்: இந்த சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் இப்படி வரத்தப்படறீங்க..?

நோயாளி: நீங்க வேற டாக்டர், அவரு மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு பார்த்துட்டு இருக்காரு..!

7 ,டாக்டர்: உங்களுக்கு என்ன பிரச்சனை ....?

நோயாளி: லுங்கியை கழட்டும் போறது..பல்லால் கடித்துக்கொண்டு கழட்டும் போது கொட்டாவி வராமல் இருக்க என்ன செய்யவேணும் டாக்டர் ..?

8 .ஒரு ஆபிரேசன் தியேட்டரில்.. டாக்டர்: நோயாளியின் நெஞ்சில் ஒரு வயரை ஒட்டினர்

நோயாளி: நோயாளி கேட்டார் இது எதக்கு டாக்டர்?

டாக்டர்: இதுதான் உங்க இரத்த ஓட்டத்தை கருவி...

இன்னும் ஒன்றை ஓட்டினார்..

நோயாளி: இது எதக்கு டாக்டர்?

டாக்டர்: இதுதான் உங்க சுவாச ஓட்டத்தை காட்டும் கருவி. இப்படி பல அவர் மீது ஒட்டப்பட்டது

நோயாளி: இதல்லாம் இயங்க கரண்ட் தானே வேணும் டாக்டர்?

டாக்டர்: நிச்சயமா அதில் என்ன சந்தேகம்?

நோயாளி: ஆப்பிரேசன் செய்யும் போது கரண்ட் நிண்டா? என்ன செய்வீங்க டாக்டர்?

டாக்டர்: சிரித்தார்..

நர்சு: ஏன்? டாக்டர் சிரிக்கிரீங்க?

டாக்டர்: கரண்ட் நிண்டா என்ன செய்வீங்கனு கேட்கிறார்...

நர்சு: போங்க டாக்டர் எனக்கு வெக்கமா இருக்கு...

9.நோயாளி: டாக்டர், நான் அஞ்சு தடவை தற்கொலை முயற்சி செய்திருக்கேன் டாக்டர்.

டாக்டர்: முதல் தடவையே என் கிட்ட வந்திருக்கலாம்ல?

10 .டாக்டர்: இதுதான் எங்க ஆஸ்பிட்டலுக்கு புதுசா வந்திருக்கிற அதி நவீன இம்போர்ட்டர் சி.டி.ஸ்கேன் மிஷின்..

நோயாளி: பழைய மிஷினுக்கும் இந்த நவீன மிஷினுக்கும் என்ன டாக்டர் வித்தியாசம்?

டாக்டர்: பழைய மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 5000 ரூபாய் வரைதான் பில் போட முடியும் இந்த நவீன மிஷின்ல ஸ்கேன் எடுத்தா 25,000 வரை பில்போட முடியும்..!

No comments:

Post a Comment