கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, February 20, 2017

லவ் பண்றதில் இத்தனை கஸ்டங்களா ?

பையன்: எங்கேயாவது நல்ல ஹோட்டலா போய் சாப்பிடலமா?

பொண்ணு: உன் இஷ்டம்

பையன்: சரவணபவன்?

பொண்ணு: போன மாசம் அங்கதானே சாப்பிட்டோம்...?

பையன்: அப்போ செட்டிநாடு...?

பொண்ணு: எனக்கு புடிக்கல.. காரமா இருக்கும்

பையன்: ம்ம் கேஎஃப்சி....?

பொண்ணு: நேத்துதான் ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க சாப்பிட்டேன்..

பையன்: அப்போ வேற எங்க போலாம்னு நீயே சொல்லு

பொண்ணு: உன் இஷ்டம்... . .

பையன்: சரி சாப்பாட்ட விடு, வேற எங்கயாவது போலாமா?

பொண்ணு: உன் இஷ்டம்...

பையன்: படத்துக்கு போலாமா....?

பொண்ணு: இப்போ வந்திருக்க எல்லா படமும் பாத்தாச்சு...

பையன்: அப்போ ஏதாச்சும் மாலுக்கு போலாமா?

பொண்ணு: வேணாம்...

பையன்: காஃபி ஷாப்....?

பொண்ணு: நான் டயட்ல இருக்கேன்...

பையன்: அப்போ வேற என்னதான் செய்யறது....?

பொண்ணு: நீயே சொல்லு... . .

பையன்: சரி எனக்கு டைமாகுது கெளம்பறேன்....

பொண்ணு: என்னை ஹாஸ்டல்ல போய் விட்டுட்டு போ..

பையன்: ஓ... நான் இன்னிக்கு பைக் எடுத்துட்டு வரல... பஸ்லதான் போகனும்

பொண்ணு: நோ பஸ்ல வேணாம். ட்ரெஸ் அழுக்காகிடும்

பையன்: அப்போ ஆட்டோ..?

பொண்ணு: வேணாம், பக்கத்துலதானே இருக்கு எதுக்கு ஆட்டோ?

பையன்: அப்போ நடந்து போகலாம்..

பொண்ணு: என்னால முடியாது, எனக்கு பசிக்குது....

பையன்: அப்போ சாப்பிட்டே போவோம்?

பொண்ணு: உன் இஷ்டம்...

பையன்:...... இதுக்கு மேல அந்த பையன் நெலமைய யோசிச்சு பார்க்கவே முடியல....

இப்படியெல்லாம் லவ் பண்றதுக்கு பேசாம ஒரு ஆஃப் அடிச்சிட்டு கவுந்து தூங்கலாம்..!!

No comments:

Post a Comment