கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, February 27, 2017

கல்யாணமும் ஆயிரம் பொய்யும்

1 .நண்பர் 1: "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"

நண்பர் 2: "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.

2 .நண்பர் 1: என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.

நண்பர் 2: இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.

3. நண்பர் 1: என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு

நண்பர் 2: ஏன் என்ன ஆச்சு ?

நண்பர் 1: எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

4.நண்பர் 1: அந்த ஊர்ல நிறைய கடன் வாங்கினேன் அதனால இந்த ஊருக்கு வந்தேன். இங்கேயும் கடன் வாங்கறேன்.

நண்பர் 2: இப்படி கடன் வாங்கறது சரியா சொல்லு?

நண்பர் 1: நான் கேட்கும்போதெல்லாம் தர்றாங்களே அது மட்டும் சரியா சொல்லு.

5.நண்பர்: என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?

ஜோசியர்: உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க

6.நண்பர் 1: "உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"

நண்பர் 2: "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."

7. நண்பர் 1: என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட பாக்கவிடமாட்டேன்றாங்க?

நண்பர் 2: இதென்ன அக்ரமமா இருக்கு?

நண்பர் 1: தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிதான் பாக்கணுமாம். இல்லாட்டா 3 வருஷம் சிறை தண்டனையாம்.

No comments:

Post a Comment