கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, February 27, 2017

கல்யாணமான தம்பதியர் முதலில் கற்றுக்கொள்வது இதுவா ?

1. ராமு: எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா

சோமு: உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....

ராமு: உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.

2.ராமு: நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

சோமு: ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

3. ராமு: கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?

சோமு: புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான். பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.

4 . ராமு: நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

சோமு: வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

5 .ராமு: "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"

சோமு: "எதுக்கு?"

ராமு: "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".

6 . ராமு: நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?

சோமு: ம் .. .. .. உங்க வீடா ?

7, சோமு: நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.

ராமு: அப்படியா ! எங்க வேலை பாக்குறீங்க?

சோமு: "கசாப்புக் கடையில!!"

8. ராமு: தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?

சோமு: தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.

9. ராமு: டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?

சோமு: தை.

10 .ராமு: பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

சோமு: என்னாச்சு?

ராமு: பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே

No comments:

Post a Comment