கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, March 11, 2017

சி.பி.எஸ்.இ. 10 -ம் வகுப்பு இனி படிக்க 6 பாடங்கள்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு இனி 6 பாடங்கள்

அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு 6 பாடங்கள் படிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ. தலைவர் ஆர்.கே.சதுர்வேதி அனைத்து சி.பி.எஸ்.இ. கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்கள் தற்போது 5 பாடங்கள் படித்து வருகிறார்கள். ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் (2017-2018) 6 பாடங்களை படிக்க வேண்டும்.

அதாவது மொழிப்பாடம்-1, மொழிப்பாடம்-2, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களோடு கூடுதலாக தொழில்கல்வி பாடம் ஒன்றையும் எடுத்து படிக்க வேண்டும்.

அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அதற்கு பதிலாக விருப்ப பாடம் பார்க்கப்படும்.

தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.தொழில் கல்வி பாடத்தில் தகவல் தொழில்நுட்பம், டைனமிக் ஆப் ரீடெய்லிங், செக்யூரிட்டி, உணவு உற்பத்தி, மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ், உடல்நல ஆரோக்கியம் உள்ளிட்ட 13 வகையான படிப்புகள் உள்ளன.

இந்த படிப்பில் ஏதாவது ஒரு படிப்பை எடுத்து படிக்க வேண்டும்.

நன்றி

http://www.thinaboomi.com க்கு.

No comments:

Post a Comment