"கிறிஸ்துவர்களின் புனித தினமான புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக தன்னை தானே அர்ப்பணித்து கொள்ளும் இந்த புனித வெள்ளி நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்களின் துக்க தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது.
பாவிகளுக்காக தன்னை சிலுவையில் பலி கொடுத்து மூன்றாம் நாள் இயேசு உயிர்தெழுத்துவதற்கு முன்பு அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட துன்பங்களை திரும்பி பார்க்கும் வகையில் இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
புனித வெள்ளியான இன்று காலை முதலே ஆலயங்களில் ஆராதனைகள் தொடங்கப்பட்டது.
சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயம், பெரம்பூர் லூர்து மாதா ஆலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், கத்திட்ரல் ஆலயம், ராயப்பேட்டை சிஎஸ்ஐ ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
கிறிஸ்து ஏசு சிலுவையில் அறைப்பட்டு சிலுவையிலேயே மரணத்தை எதிர்கொள்ளும் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் இன்று சிலுவை பாதை வழிபாடுகள் நடைபெறும். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பு அவர் பட்ட பாடுகளை நினைவில் கொள்ளும் இந்த புனித வெள்ளி ஈஸ்டர் திருவிழாவின் முன்னோட்டாகும்.
No comments:
Post a Comment