கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes
Blogger Widgetsதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,
தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்

Saturday, April 8, 2017

புதிய சனி பெயர்ச்சி

*ஒரு புது திருமணத்தம்பதிகள் திருமணம் ஆன இரண்டாவது நாளில் சொந்த கிராமத்திற்கு சென்றனர்.

பஸ்ஸை விட்டு இறங்கி செல்லும் வழியெல்லாம் கல்லாக இருந்தது.

அப்போது ஒரு கல் அந்தப் பெண்ணின் காலை தடுக்கி விட அவள் 'ஆ' என்று கத்தினாள்.

மாப்பிள்ளை அந்த கல்லை 'சனியன் பிடித்த கல்' என்று திட்டியபடி அவள் கையை பிடித்துக் கொண்டு அணைத்தவாறு கூட்டிச் சென்றான்.

மூன்று ஆண்டு கழித்து

*சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு மறுபடியும் கிராமத்திற்கு சென்றனர்.

அப்போதும் கிராமத்திற்கு செல்லும் வழி மாறாமல் பழையபடி கல்லாகத்தான் இருந்தது.

இந்த முறையும் அந்த பெண் ஒரு கல் தடுக்கி 'ஆ' என்று கத்தினாள்.*

உடனே அவள் கணவன் 'சனியனே பார்த்து வரக்கூடாதா' என்று திட்டினான்.

சென்ற முறை கல்லில் இருந்த சனி இம்முறை அவளிடம் பெயர்ந்து விட்டது.

*இதைத்தான் 'சனிப்பெயர்ச்சி' என்று சொல்கிறார்களோ*!!😝