கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, May 31, 2017

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு

அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு 4%ஆக உயர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் 1981-ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பார்வைக் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை-கால் பாதிக்கப்பட்டோருக்குத் தலா 1 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் 4 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன்படி, ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக தமிழக அரசுப் பணிகளிலும் உயர்த்தி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

யார் யாருக்கு எவ்வளவு?

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசுப் பணிகளில் அளிக்கப்பட இருக்கும் 4 சதவீத ஒதுக்கீட்டில் பார்வைக் குறைபாடு உடையோருக்கு 1 சதவீதம், செவித் திறன் குறைபாடு உடையோருக்கு 1 சதவீதம், கை-கால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு 1 சதவீதம், புறஉலகு சிந்தனையற்றோர், அறிவு சார் குறைபாடுடையோர், மனலநம் பாதிக்கப்பட்டோருக்கு 1 சதவீதம் என ஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதியுதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

No comments:

Post a Comment