கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, May 29, 2017

பள்ளிகளில் மீண்டும் நீதிபோதனை வகுப்பு ஆரம்பம்

வரும் கல்வியாண்டு முதல் நீதிபோதனை வகுப்பு

அரசு பள்ளிகளில், மாணவர்களை நல்வழிப்படுத்தும் நீதிபோதனை வகுப்புகள், புதிய கல்வியாண்டு முதல் மீண்டும் தனிப்பாடவேளையாக செயல்படுத்தப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீதி கருத்துகளை கற்பிக்கும் வகையில், நீதிபோதனை வகுப்புகள் வாரத்திற்கு ஒரு பாடவேளையாக செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இவ்வகுப்புகளை நாள்தோறும் நடத்தும் வகையில், ஒவ்வொரு பாடவேளைக்கு முன்னரும் பத்து நிமிடம், இடைவேளை நேரம், இறை வணக்கக் கூட்டங்களில் நீதிபோதனை கருத்துகளை கற்பிக்கும் படி திட்டம் மாற்றப்பட்டது.

தொடர்ந்து, யோகா பயிற்சி, பாடவேளைக்கு நேரமின்மை போன்ற காரணங்களால், நீதிபோதனை வகுப்பிற்கான நேரம் குறைக்கப்பட்டு, இவ்வகுப்புகள் நடத்துவதே அரிதாகிவிட்டது. இதனால், மாணவர்களுக்கும் நீதிபோதனை வகுப்புகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கிடையே தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும், மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஏற்படும் தீய எண்ணங்களை களையவும் நீதி போதனை வகுப்புகளை தனி பாடவேளையாக செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டது.

வாரம் இருமுறை, 45 நிமிடம் கொண்ட இரு பாடவேளைகள், முழுமையாக நிதிபோதனை வகுப்புகளாக மாற்றவும், பள்ளி பாடவேளையில் அவ்வகுப்புகளை சேர்க்கவும், ஆசிரியர்கள் அவ்வகுப்புகளில் கட்டாயம் மற்ற பாடங்களை நடத்தக்கூடாது என்பன போன்ற விதிமுறைகளும் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், கடந்தாண்டு, இந்த நடைமுறை அறிவிப்போடு நின்றுவிட்டதால், பத்து நிமிட இடைவேளை நன்னெறி வகுப்புகள் மட்டுமே தொடர்ந்தன.பள்ளி மாணவர்களை நல்வழிபடுத்துவதில், நீதிபோதனை வகுப்புகளும் முக்கிய பங்கு வகுக்கிறது. மாணவர்களின் உளவியல் ரீதியாக சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடமாடும் ஆலோசனை மையத் திட்டம் உள்ளது. ஆனால், அவ்வாறு உளவியல் ரீதியாக பாதிக்கப்படாமல் மனதை ஒருமுகப்படுத்துவது இதுபோன்ற நன்னெறி வகுப்புகள்தான்.

சிறந்த கருத்துகளை, சிறப்பான முறையில், மாணவர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்ப்பது மட்டுமே இந்த வகுப்பின் நோக்கம்.கடந்த, நான்காண்டுகளாக இல்லாத வாய்ப்பு வரும் கல்வியாண்டு முதல் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

வரும் கல்வியாண்டில், மாதம் ஐந்து வகுப்புகள் என நன்னெறி வகுப்புகளுக்கு ஒரு தனிப்பாட வேளை ஒதுக்க கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகுப்புகளில் திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, எந்தெந்த குறள்களை கற்பிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு அட்டவணை வழங்க, கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment