"நடப்பு கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் இயங்கும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
பள்ளிகளுக்கான நடப்பு (2017-2018) ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில் நடப்பு கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்றும், மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி இயங்கும் நாட்கள் நடப்பு ஆண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான நடப்பு ஆண்டு செயல் திட்டத்தை (2017-2018) தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 7ந் தேதி பள்ளிகள் திறந்தது. முதல் கல்வி ஆண்டு முடியும் வரை எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும்? என்னென்ன நாட்களில் விடுமுறை? தேர்வு எப்போது? அந்தந்த மாதங்களில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? ஆகியவை குறித்து அதில் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment