கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, July 14, 2017

போலீஸ் வேலைக்கு உடல் தகுதித் தேர்வு ஜுலை 27 ல் நடக்கிறது

தமிழகத்தில் 15 மையங்களில் போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வு 27-ந் தேதி முதல் நடக்கிறது

இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

6.32 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலர் (13,137 பணியிடம்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (1,015) மற்றும் தீயணைப்போர் (1,512) பணிகளுக்கான பொதுத்தேர்வு அறிவிக்கை கடந்த ஜனவரி     23-ந் தேதி வெளியிடப்பட்டது.

இதுவரை நடைபெற்ற பொதுத் தேர்வுகளிலேயே அதிக அளவாக இந்த தேர்வுக்கு 6.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வுக்கு அதிகபட்சமாக 2.71 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன. இந்த தேர்வில் முதன்முறையாக திருநங்கைகள், மூன்றாம் பாலினப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அனுமதித்து இருந்தது.

உடல் தகுதி தேர்வு இதற்கான எழுத்துத் தேர்வு சென்னை உள்பட 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 410 தேர்வு மையங்களில் கடந்த மே மாதம் 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 4.82 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் கடந்த 7-ந் தேதி www.tnusr-b-o-n-l-i-ne.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. உடல்கூறு அளத்தல், உடல்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டிகள் ஆகியவை சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 15 மையங்களில் வருகிற 27-ந் தேதி முதல் நடைபெறுகிறது.

இதற்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்பு கடிதம் கடந்த 12-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அழைப்பு கடிதம் இந்த தேர்வுக்கு தேர்வான விண்ணப்பதாரர்கள் தன்னுடைய சேர்க்கை எண் மற்றும் பிறந்த தேதியை இணையதளத்தில் உள்ளடு செய்து அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வான விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படமாட்டாது. தேர்வாகாத விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண்ணை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment