டெங்கு காய்ச்சல் தகவலும் எச்சரிக்கையும்
டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால்ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது.
நோயின் அறிகுறிகள்
1. கடுமையான காய்ச்சல்
2. தலைவலி
3. கண்களுக்கு கீழாலும் தசைகளிலும் மூட்டுக்களிலும் வலி ஏற்படுதல
4. பசியின்மை/உணவில் விருப்பின்ம
5. வாந்தி ஏற்படுவதோடு தோலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படுதல் தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும் இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.
தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை.
நோய் பாதித்தவரைக் கடித்த கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.
இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப காலங்களில் பெருகும்.
மழைக்காலங்களில்தான் டெங்கு காய்ச்சல் வரும் என்ற நிலை மாறி கோடையிலும் வந்து மக்களை வாட்டி வதைக்கிறது டெங்கு காய்ச்சல். இதற்கு காரணம் கோடையிலும் நல்ல மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதுதான்.
வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த கொசு பகல்நேரத்தில்தான் கடிக்கும். உடல்வலி, முதுகுவலி, காய்ச்சல், திடீர் குளிருடன் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் போன்றவை இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.
கொசு உற்பத்தியாவதை தடுக்க வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர்.
கொசு கடிக்காதவகையில் நன்கு மூடப்பட்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோய்க்கும் குட் பை சொல்லி விடலாம். டெங்கு தாக்கியதனால் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.
காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடன் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் பருகலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். சாதாரண காய்ச்சல் என்று நினைத்து பாராசிட்டமால் கொடுப்பார்கள். ஆனால் எந்த காரணம் கொண்டும் டெங்கு பாதித்தவர்களுக்கு ஆஸ்பிரின் புரூபென், மருந்துகளை கொடுக்கக் கூடாது. ஏனெனில் இது ரத்தத்திட்டுகளை குறையச்செய்து ரத்தக்கசிவினை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை .
நிலவேம்பு குடிநீர்
நிலவேம்பு குடிநீர் சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், சந்தனத்தூள், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று ஒன்பது வகையான இயற்கை மருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. இது உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலைப் போக்கும் தன்மை கொண்டவை.
தலைவலி, மூட்டுவலி ஆகியவற்றையும் இவை போக்கிவிடும். நாவறட்சியைத் தடுத்து உடலில் நீர்ச்சத்து குறை யாமல் வெட்டிவேர் காப்பாற்றும். தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, குடல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைப் போக்கி புண் ஏதும் ஏற் படாமல் தடுக்கும். உடலில் உள்ள அகட்டு வாயுவை அகற்றி வயிறு உப்புசம் ஏற் படாமல் சுக்கு தடுக்கும்.
சிறுநீர் எரிச்சலைப் போக்கி அதிக சிறுநீர் எளிதில் வெளியேற சந்தனத்தூள் வழிவகை செய்கிறது. இத்தனை செயல்களையும் ஒருங்கே கொண்டதுதான் இந்த நிலவேம்பு சூரணம். இது, டெங்குவுக்கு மட்டுமல்ல…
பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற 90 வகையான வைரஸ் காய்ச் சலுக்கும் ஏற்ற அற்புதமான மருந்து.
No comments:
Post a Comment