"கல்விக்கடன் கொடுத்த வங்கி மேலாளரை நெகிழ வைத்த மாணவி
அக்ரி நாச்சியப்பன் என்பவர் காரைக்குடி ஸ்டேட் ஆப் இந்தியா வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் 2009-ம் ஆண்டு பணிபுரிந்த போது பத்மபிரியா என்ற மாணவி பொறியியல் படிக்க கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அவரது மதிப்பெண் சான்றிதழை பார்த்த அக்ரி நாச்சியப்பன் பத்மபிரியாவுக்கு கல்வி கடன் அளித்துள்ளார். கல்வி கடன் பெற்ற அவர் சிறப்பாக படித்து பொறியியல் பட்டம் பெற்றார்.
தற்பொழுது துபாயில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கல்விக்கடன் முழுவதையும் அவரது சம்பள பணத்திலேயே வங்கியில் செலுத்திவிட்டார். இந்நிலையில் பத்மபிரியா தனது திருமணத்திற்கு கல்விக்கடன் அளித்த வங்கி மேலாளரின் இல்லத்திற்கு பெற்றோருடன் சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைத்த அவர் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். இந்த சம்பவம் குறித்து அக்ரி நாச்சியப்பன் கூறுகையில்,
நான் பணி ஓய்வு பெற்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. வங்கி ஊழியர்களையே என்னை மறந்து விட்ட நிலையில், கல்வி கடன் கொடுத்த ஒரே காரணத்தால் பத்மபிரியா என்னை திருமணத்திற்கு அழைத்தது என்னை நெகிழ செய்து விட்டது என்றார்.
மக்களின் வட்டி பணத்தில் தான் நாம் ஊதியம் பெறுகிறோம், எனவே தங்களால் முடிந்த வரை புனிதமான கல்விக் கடனை வழங்குங்கள் என்று தெரிவித்தார். உங்களின் இந்த செயலால் உங்களுக்கும் மனநிறைவு உண்டாகும், நல்ல மாணவர் சமுதாயம் உங்களின் பங்களிப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்."
No comments:
Post a Comment