"சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஏற்பட்ட காலியிடங்களில் புதியதாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அவர்களில் உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் பாடப்பிரிவுகள் அடங்கும். இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்து தேர்வு செப்டம்பர் 23ம் தேதி நடக்கிறது. பணி நிறைவு வயது 58 ஆண்டுகள் என்பதால் விண்ணப்பிக்கும் நபர்கள் 1.7.17 அன்று 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ₹500, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ₹250 மட்டும்.
கட்டணம் அனைத்தும் இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். அனைத்து செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டுமே செய்தல் வேண்டும். www.trb.tn.nic.in இணைய தளத்தில் அதற்குரிய trbonlineexams.in/spl/ இணைப்பை பயன்படுத்தி இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். இரண்டரை மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரி்யர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 40 சதவீதம் எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ இனத்தவர்கள் 35 சதவீதம், எஸ்டி இனத்தவர் 30 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். எழுத்து தேர்வு செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கும்."
No comments:
Post a Comment